Home /News /tamil-nadu /

Exclusive | டெல்டாவில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம்

Exclusive | டெல்டாவில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளையும் , ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 67 கிணறுகளையும் அமைக்கிறது என விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம் செய்துள்ளன.

வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளையும் , ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 67 கிணறுகளையும் அமைக்கிறது.
இந்த கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறுவதற்கு சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை அவசியம். அதனால் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்கக்கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுடம் விண்ணப்பித்துள்ளது.

ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான ஆய்வு எல்லைகள் (TOR) வழங்கப்பட்டுள்ளது.

இதில் நாகை, காரைக்கால், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, திருவாரூர் ஆகிய இடங்களில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் இந்த கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

வேதாந்தா நிறுவனம் 13, 500 கோடியும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5, 150 கோடியும் முதலீடு செய்யவிருக்கிறது. சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர்,  வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன், திண்டிவனம், வானூர்,காரைக்கால், புவனகிரி, பெரியகுடி ஆகிய இடங்களில் இந்த கிணறுகள் அமையவுள்ளன.

காவிரிப்படுகையில் 6000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்ற ஓ.என்.ஜி.சி., வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன் இந்திய பெட்ரோலியத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தமிட்டிருந்தது.

ஒ.என்.ஜி.சி. விண்ணப்பம்


 

 

வேதாந்தா நிறுவனத்தின் விண்ணப்பம்


வேதாந்தா நிறுவனத்தின் விண்ணப்பம்


ஒ.என்.ஜி.சி. விண்ணப்பம்


தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் அறிக்கையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வாக்குறுதியாக கூறியுள்ள நிலையில் 341 புதிய கிணறுகள் அமைக்க வேதாந்தா, ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

பெரும்பான்மையான கிணறுகள் ஆழமற்ற கடல் பகுதியில் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளது.

Also see...  ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் மத்திய மத்திய அரசுக்கு பின்னடைவு


Also see... மக்கள் முன் உரையற்றியபோது கண்ணீர்விட்ட அன்புமணி


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cauvery Delta, Cauvery Delta Lok Sabha Elections 2019, ONGC, ONGC Gas, Vedanta

அடுத்த செய்தி