அம்பேத்கரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாதை மற்றும் செயல்பாடுகள் வேறாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அம்பேத்கரின் பிறந்த நாளின்போது கும்பகோணத்தில், அம்பேத்கருக்கு காவி உடை திருநீறு மற்றும் குங்குமம் பொட்டு வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது சங் பரிவார் அமைப்பினர்களை கண்டித்து முழக்கம் எழுப்பி, விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் உரையாற்றிய திருமாவளவன், “தேர்தல் வரும் போகும்; பதவி இருக்கும் இல்லாமல் போகும். ஆனால் கடைசி வரை தாங்கள் அம்பேத்கர் பெரியார் பிள்ளைகளாக களமாடுவோம் என கூறினார்.
மனிதர்களை பாகுபடுத்த கூடிய கருத்துகள்தான் சனாதானம். அந்த சனாதானத்தை மனு தர்மத்தை எதிர்த்து போராடி வீழ்த்த முடியாது, அதற்கு பதிலாக இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை அம்பேத்கர் ஏற்றதாக கூறினார்.
திருமாவளவனுக்கு எதிராக அவதூறு பரப்பி விட்டு போகட்டும் அது என்னை அசைத்து விடாது. நான் அதை பொருட்படுத்த கூடியவன் அல்ல, என் கடன் மக்கள் பணி செய்து கிடப்பது. பெரியார் அம்பேத்கர் ஆகியோரை கொச்சைப்படுத்துவது காவிமயம் படுத்துவது ஏற்க முடியாது” என கூறினார்.
“முதலில் திருவள்ளுவர், பெரியார் மற்றும் அண்ணாவுக்கு காவி சாயம் பூசினார்கள். இப்போது அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து, திருநீறு, குங்குமம் போட்டு வைத்து போஸ்டர் ஓட்டுகிறார்கள். இது சாதாரணமாக கடந்து செல்ல கூடிய விஷயம் அல்ல. அல்லாவுக்கு யாராவது உருவம் வரைந்தால் இஸ்லாமியர்கள் அவரை உயிரோடு விடமாட்டார்கள். அழித்தொழித்து விடுவார்கள்” என தெரிவித்தார்.
மேலும் அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயற்சி செய்தால், விசிகவின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும் என திருமாவளவன் எச்சரித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambedkar, Thirumavalavan, VCK