ராஜராஜ சோழனை இந்துவாக்க முயற்சிக்கின்றனர் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியது அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு கலை திருவிழா சென்னையில் நடைபெற்றது; இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசுகையில், சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால் தான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்றதாக திகழ்கிறது.
தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். அதேபோல் ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்’ என பேசி இருந்தார்.
அவரது பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜராஜ சோழனை இந்து அல்ல என்று கூறியதற்காக வெற்றி மாறன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், வெற்றி மாறன் கருத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: "ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்.. இந்து அல்ல" - இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு எம்.பி ஜோதிமணி ஆதரவு..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை.என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director vetrimaran, Rajarajacholan, Thol Thirumaavalavan