முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவி வழங்குவது என்பது யாரும் போட்ட பிச்சையல்ல: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி

தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவி வழங்குவது என்பது யாரும் போட்ட பிச்சையல்ல: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி

திருமாவளவன், எம்பி

திருமாவளவன், எம்பி

  • 1-MIN READ
  • Last Updated :

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு நீதிபதி பதவி வழங்குவது என்பது யாரும் போட்ட பிச்சையல்ல எனவும், அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் தந்த உரிமை என்றும் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சியில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், எழுபது வயது வரை மேக்கப் போட்டு நடித்துவிட்டு ஆட்சிக்கு வரத் துடிப்பவர்கள் மத்தியில், 30 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா எனக் கேள்வி எழுப்பினார்.

தாழ்த்தப்பட்டோர் நீதிபதியானது யாரும் போட்ட பிச்சையல்ல. அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியின் நிறைவாகப் பேசிய அவர் இதைக் கூறினார்.

ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை  என தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி பேசி சர்ச்சையானது. இதையடுத்து தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ஆர்.எஸ். பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

Also see:

First published:

Tags: Controversial speech, DMK, RS Barathi, Thol. Thirumavalavan, VCK