Home /News /tamil-nadu /

'மோடியின் பேச்சை கேட்டால் பாதிப்பு அதிமுக-வுக்குத்தான்': திருமாவளவன் எம்.பி

'மோடியின் பேச்சை கேட்டால் பாதிப்பு அதிமுக-வுக்குத்தான்': திருமாவளவன் எம்.பி

திருமாவளவன்

திருமாவளவன்

”ஜெயலலிதாவின் வாரிசு என கூறும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு துணிச்சல் கொஞ்சம் கூட இல்லை, மோடியின் பேச்சை கேட்டால் தமிழகத்தில் பாதிக்கப்படப்போவது அதிமுக தான். இந்த நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ்தான்... பாஜக அல்ல” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற தேசம் காப்போம் என்ற தலைப்பிலான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது,

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினைரையும் பாதிக்கும். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் போதிய ஆவணமில்லாவிட்டால் இந்துக்களும் தடுப்புமுகாம்களில் அடைக்கும் நிலையை உருவாக்கும்.

சங்பரிவார்களின் கனவுத் திட்டங்களை மட்டும்தான் பாஜக அரசு நிறைவேற்றிவருகிறது. இந்தியாவை இந்திய ராஷ்ட்ரமாக அறிவிக்கவேண்டும் என்பதும் அதற்கு தடையாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நீண்டநாள் கனவு .

ஆனால் அதனை நாங்கள் செய்ய விடமாட்டோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்பு இஸ்லாமியர்களுக்குதான் என கிறிஸ்துவர்கள் அமைதியாக இருக்கக்கூடாது. பிரிவினையை ஏற்படுத்தி கிறிஸ்துவர்களை மெல்ல பாஜக பழிவாங்கும். தெரிந்தே அரசியலமைப்புக்கு எதிரான ஒரு சட்டத்தை பாஜக நிறைவேற்றிவருகிறது.

அரசியலமைப்பு சட்டம் தான் எனது வேதம் என மோடி கூறுவது அவரது வேஷம். 2021-ல் இந்தியாவில் யாரும் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களும் இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சி தான் குடியுரிமை திருத்த சட்டம். முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் நாட்டைப் பிரிக்க பாஜக சூழ்ச்சி செய்துவருகிறது.

இந்த நாட்டை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்தான் பாஜக அல்ல எனவும், இந்தியா முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பதற்றத்திற்கு காரணமானவர்கள் அதிமுகவும், பாமகவும் தான். NPR-க்கு எதிராக ஏன் எடப்பாடி அறிவிப்பு வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் வாரிசுகள் என கூறிகொள்ளும் ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸுக்கும், அவரது துணிச்சல் ஏன் இல்லை. அதில் 10% துணிச்சல் இருக்கிறதா? எனவும் மோடியின் பேச்சை கேட்டால் தமிழகத்தில் பாதிக்கப்படப்போவது அதிமுகதான் என்றார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: ADMK, Narendra Modi, Thirumavalavan, VCK

அடுத்த செய்தி