தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று தமிழக அரசின் உரையை ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தார். மேலும் ஆளுநர் உரை முடிந்தவுடன் பேசிய முதலமைச்சர், அச்சிடப்பட்ட உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும் என தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் முழுமனதோடு நிறைவேறியது. முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளுநரின் இந்த செயலை எதிர்த்து ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், ''ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும்.
சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். (2/2) pic.twitter.com/b6BhET89Hr
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 9, 2023
அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என பதிவிட்டிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RN Ravi, Tamil Nadu Governor, Thirumavalavan, Thol. Thirumavalavan, VCK