ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
தீர்ப்பு வெளியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’ என தெரிவித்துள்ளார்.
அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.
அவருக்கு எமது வாழ்த்துகள்.
இவ்வாய்ப்பு மீண்டும்
பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.#ADMK pic.twitter.com/0bpB5Juw4e
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 23, 2023
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi Palaniswami, Supreme court, Thirumavalavan