• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிங்காரச்சென்னை 2.0 திட்டம்: தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் வைக்கும் கோரிக்கை!

சிங்காரச்சென்னை 2.0 திட்டம்: தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் வைக்கும் கோரிக்கை!

namma chennai

namma chennai

தமிழக கிராமங்களில் இரட்டை சுடுகாடு இரட்டை குளம் இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த முறையை ஒழித்து சமத்துவ சுடுகாடு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Share this:
    சென்னையின் பூர்வக்குடிகளை வெளியேற்றாமல் சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த விசிக வலியுறுத்தல்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன் பேசியதாவது, "சென்னை மெரினா கடற்கரையில் இரண்டு கலங்கரை விளக்கங்கள் செயல்பட உள்ளது. ஒன்று கடலுக்கு வழிகாட்டுகிறது. மற்றொன்று மக்களுக்கு வழி காட்டுகிறது. மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

    Also read: மத்திய அமைச்சர் திடீர் கைது! – 20 ஆண்டுகளில் முதல் முறை…

    தமிழக கிராமங்களில் இரட்டை சுடுகாடு இரட்டை குளம் இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த முறையை ஒழித்து சமத்துவ சுடுகாடு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. அதேபோல், துணைத் தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

    Also read: ஆப்கனுக்கு உக்ரைன் மக்களை மீட்கச் சென்ற பயணிகள் விமானம் ஈரானுக்கு கடத்தல்!

    தமிழக அரசு மீண்டும் செயல்படுத்தப்பட உள்ள நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவை மக்கள் ஏற்கும் வகையில் திட்டம் உள்ளது.  இம்முறையை மாற்றி நான்கில் ஒரு பங்கு என மக்கள் மீதான சுமையை குறைக்க வேண்டும்.

    சற்றேறக்குறைய லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொதுத்துறை பங்குகளை குத்தகை என்ற அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பை  ஒன்றிய அரசு செய்திருக்கிறது. இது மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தனது கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து பாரத பிரதமருக்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தை செய்த வரவேற்கிறோம். அதேவேளையில் சென்னையின் பூர்வக்குடிகளை நகரத்தில் இருந்து வெளியேற்றாமல் இந்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: