பெண் அரசு ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசிய விசிக பிரமுகர் - பரபரப்பு வீடியோ
பெண் அரசு ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசிய விசிக பிரமுகர் - பரபரப்பு வீடியோ
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த சேரன்
VCK Villupuram | பெண் செயற்பொறியாளரை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மிரட்டும் காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாட்கோ அலுவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த சேரன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்ககோரி செயற்பொறியாளரை தகாத வார்த்தையால் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தாட்கோ அலுவகத்தில் செயற்பொறியாளராக அன்புதேவகுமாரி பணியாற்றி வருகிறார். இந்நிலையில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு செயற்பொறியாளர் அன்புதேவகுமாரியிடம் நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்க கூறி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரியிடம் சேரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த சேரன் பெண் அதிகாரியை தகாத வார்த்தையால் பேசியதோடு மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தாட்கோ பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பெண் செயற்பொறியாளரை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மிரட்டும் காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ஆ.குணாநிதி
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.