அரியலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் போராட்டம்

அரியலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் போராட்டம்

திருமாவளவன்

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 அன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கு நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் கடுமையாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கொரோனா பரவல், மாணவர்கள் பயணம் செய்வதில் உள்ள சிக்கல், பீகார், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு போன்றவற்றை அவர்கள் காரணங்களாகக் கூறி வருகின்றனர்.

  Also read: 11 அடுக்கு உறை கிணறு: 6-ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் கண்டுபிடிப்பு

  இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும், கல்வித் துறையை மாநில அரசின் பட்டியலில் கொண்டுவர வலியுறுத்தியும், அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கொரோனா தொற்று பரவும் நிலையில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
  Published by:Rizwan
  First published: