இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படவுள்ள மகா சிவராத்திரி விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆன்மிக பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும் என்று விசிக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் வகையில் அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்டிருந்தார். இதன்படி மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மாகா சிவராத்திரி விழா 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்களைக் கொண்டு, சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், ஆன்மீகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை இடம்பெறவுள்ளன. ஆன்மீகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கபடவுள்ளது. அதில், பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்தி கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அரங்கில் 3000 நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - திமுக ஆட்சி... பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு தள்ளுபடி
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மகா சிவராத்திரி விழாவுக்கு திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறுகையில், 'மார்ச் 1 அன்று மயிலாப்பூர் கோயிலில் மகா சிவராத்திரி விழாஒன்றை நடத்தப்போவதாக அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிவிப்பு ஆபத்தானதாகும். ஆன்மிகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இச் செயல் திட்டத்துக்கு அனுமதிக்க கூடாது' என்று கூறியுள்ளார்.
விசிகவின் எதிர்ப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri, Tamilnadu govt, VCK