முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பௌத்தம், சமணம், சாதி சடங்குகளை பின்பற்றாத கோவில்களை இணைத்து புதிய அறநிலையத்துறை: விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் வேண்டுகோள்

பௌத்தம், சமணம், சாதி சடங்குகளை பின்பற்றாத கோவில்களை இணைத்து புதிய அறநிலையத்துறை: விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் வேண்டுகோள்

சிந்தனை செல்வன்

சிந்தனை செல்வன்

தமிழர்களின் மெய்யறிவு மரபை பாதுகாக்கின்ற வகையில் சமணம் பௌத்தம் மற்றும் சனாதன சாதி சடங்குகளை பின்பற்றாத ஆதிதிராவிடர் மக்கள் வழிபடக்கூடிய கோயில்களை இணைத்து தமிழர்களின் மெய்யறிவு அறநிலைய துறை ஒன்றை புதிதாக உருவாக்க வேண்டும் என்று சிந்தனை செல்வன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சமணம்,பௌத்தம் மற்றும் சாதி சடங்குகளை பின்பற்றாத ஆதிதிராவிடர் பகுதியிலுள்ள கோவில்களை இணைத்து புதிய அறநிலையத்துறையை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன். திராவிட முன்னேற்ற கழக அரசை ஆன்மீகவாதிகளுக்கு எதிரான அரசு என சித்தரிக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. திமுக அரசு மதசார்பற்ற அரசாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்,

மேலும்,  சனாதன ஆன்மிக அல்லது இந்துமத வாதத்தில் இருந்து விலகி நின்று சீர்திருத்த மரபோடு பேசக்கூடிய வழியில் தமிழர்களின் மெய்யறிவு மரபை பாதுகாக்கின்ற வகையில் சமணம் பௌத்தம் மற்றும் சனாதன சாதி சடங்குகளை பின்பற்றாத ஆதிதிராவிடர் மக்கள் வழிபடக்கூடிய கோயில்களை இணைத்து தமிழர்களின் மெய்யறிவு அறநிலைய துறை ஒன்றை புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

First published:

Tags: Buddhism, Temple, TN Assembly, VCK