Home /News /tamil-nadu /

இணையதளத்தில் வீடியோ பதிவிட்ட கிருத்திகா உதயநிதி: பேரவையில் பாராட்டு தெரிவித்த ஆளூர் ஷானவாஸ்!

இணையதளத்தில் வீடியோ பதிவிட்ட கிருத்திகா உதயநிதி: பேரவையில் பாராட்டு தெரிவித்த ஆளூர் ஷானவாஸ்!

கழிப்பிட கட்டமைப்புகளை உலகத் தரத்திற்கு தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கழிப்பிட கட்டமைப்புகளின் முக்கியத்துவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்ட கிருத்திகா உதயநிதிக்கு சட்டப்பேரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது,

    தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் இயற்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதி கழிப்பிட கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக இணையதளத்தில் வீடியோ பதிவிட்டதை வரவேற்கிறேன்.

    மருதமலை முருகன் கோயிலில் ரோப் கார் வசதி கோரிய எம்எல்ஏ.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்!

    கழிப்பிட கட்டமைப்புகளை உலகத் தரத்திற்கு தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை தூண்டி மதக் கலவரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்க தணி சட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.

    மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செயலகத்திற்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Aloor shanawas, TN Assembly

    அடுத்த செய்தி