சென்னை அண்ணா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது அதில் கட்சி நிர்வாகி திருமாவளவனுக்கு வெள்ளி வேல் பரிசாக வழங்கினார்.
தேர்த்கலுக்காக திமுகவும், விசிகவும் வேல் ஏந்துகிறதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தேர்தலுக்காக ஏந்துவது அல்ல தமிழர்களுக்கு இது நீண்ட நாள் பாரம்பரியமான ஒரு பண்பாடு. எங்கள் கட்சியிலும் முருக பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்ட என்னிடத்தில் வேலை வழங்கி இருக்கிறார்கள் என்றார்.
மேலும். ஏழு தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் நாடகமாடுகிறது. தமிழர்களை வஞ்சிக்கிறது. 25-ம் தேதியே ஆளுநர் உச்சநீதிமன்றத்திற்கு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் 30 ஆம் தேதி ஆளுநரை முதல்வர் சந்தித்துவிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சொல்லியிருப்பதாக ட்வீட் செய்திருக்கிறார்
ஆளுநர் முதல்வர் இடத்திலே உண்மையை மறைத்தாரா? அல்லது ஆளுநர் முன்தேதியிட்டு தனது காலதாமதத்தை மறைக்கிறாரா என தெரியவில்லை. ஆளுநருக்கு தான் இந்த விவகாரத்தில் அதிகாரம் இருக்கிறது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் குடியரசுத் தலைவருக்கு அதில் அதிகாரம் இருக்கிறது என மடைமாற்றி இருப்பது தமிழருக்கு செய்யப்பட்டிருக்க மிகப்பெரிய ஓரவஞ்சனை ஆகும். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமா வேண்டாமா என நாம் ஆளுநரை கோரவில்லை தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டது.
அந்த முடிவுக்கு இசைவு தர வேண்டியது அவருடைய கடமை. இதில் இசைவு தராமல் குடியரசுத்தலைவருக்கு திருப்பி அனுப்பி இருப்பது சட்டவிரோதமான செயல். காலம் தாழ்த்துகிற செயல். தமிழகத்திற்கு துரோகம் செய்கிற செயல் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் பாஜகவிற்கு கடன்பட்டு இருக்கிறார். பாரதரத்னா ராஜ்யசபா போன்ற பதவிகளை கொடுத்ததற்காக கட்டாயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்புகிற செயல் 70 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றனர் 200 பேரை பலி கொடுத்து உலகத்திற்கு அறப்போராட்டத்தை வழிகாட்டுகின்றனர். உலகத்திற்கு உணவளிக்கும் விவசாய குடிமக்களை கொச்சைப் படுத்துகின்ற செயல் இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thol. Thirumavalavan, VCK