கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தழிழ்நாட்டில் கிராமப்புற ஏழை எளிய, பட்டியல் இனத்தினர், பழங்குடியினர், மகளிர் ஆகியோரின் பொருளாதார மேம்பாட்டுக்கும் சுயமரியாதைக்கும் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. தங்களின் பெருமுயற்ச்சியால் தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு பெருமளவு சுழல்நிதி வழங்கப்பட்டு மகளிர் தன்முனைப்போடு முன்னேறி வருகின்றனர்.
இதையும் வாசிக்க: 10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த போவதில்லை : அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு
தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய பல்வகைப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு பட்டியல் இனத்தினர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு பட்டியல் இனத்தினர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இன்னிலையில் எதிர்வரும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பட்டியல் இனத்தினர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசு ஆணை வழங்கப்படும் பட்சத்தில், உண்மையான சமூகநீதி சமத்துவத்தை எட்டுவதில் தங்கள் தலைமையிலான அரசின் ஒரு முன் முயற்சியாகும்.
எனவே, முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணைத்தவைர் பதவிகளில் பட்டியல் இனத்தினர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க உரிய ஆணை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thol. Thirumavalavan