சங் பரிவார் அமைப்புகளிடம் இருந்து தமிழ்நாட்டையாவது காப்பாற்றியாக வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதி பதவி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க கோரியும், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் உயர் சாதி நியமனத்தை கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய திருமாவளவன், இந்துத்துவா என்பது ஆன்மீக கோட்பாடு அல்ல என்றும், இது பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் உருவாக்கிய அரசியல் கோட்பாடு என்றும் விமர்சித்தார். தமிழகத்தில் ஒரு காலத்தில் அம்பேத்கர் சிலை மட்டும் அவமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரியார் சிலையை அகற்றும் அளவுக்கு சங் பரிவார் அமைப்புகள் வளர்ச்சியடைந்திருப்பது கவலையளிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்,.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Thol Thirumaavalavan, VCK