ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் பாஜகவினர் மீது சந்தேகம் உள்ளது’ – திருமாவளவன்

‘தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் பாஜகவினர் மீது சந்தேகம் உள்ளது’ – திருமாவளவன்

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தின் வருங்காலத்திற்கு நல்லதல்ல. ஜாதி - மத பிரச்சனை ஏற்படக்கூடும். – திருமாவளவன்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அமைதி நல்லிணக்க பேரணி நடத்த உள்ளனர். இதற்கு அனுமதி வாங்குவதற்காக இன்று மதியம் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற அக்டோபர் 2 காந்தியடிகள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் நகரங்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அமைதி நல்லிணக்க பேரணி நடத்த உள்ளோம். அதற்கான மனு அளிப்பதற்காக டி.ஜி.பி.யை, நேரில் சந்தித்தேன்.

சனாதன சக்திகள் தமிழகத்தில் ஜாதி - மத கலவரம் நடத்த முற்பட்டு வருகின்றன. அதனால் தான் அவர்கள் அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் பேரணிக்கு அனுமதி வாங்கி உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் தமிழகத்தில் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? அவர்களின் நோக்கம் என்ன? இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என மக்களை பிரித்து கலவரம் ஏற்படுத்த தான் இந்த பேரணியை தமிழகத்தில் நடத்த உள்ளனர்.

அதிமுகவில் இணைவதாக வெளியான தகவல்... சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு..

திமுகவுக்கு அடுத்து தமிழகத்தில் அதிமுக அல்ல; நாங்கள் தான் என சனாதன சக்திகள் கூறிக்கொண்டு வருகின்றன. அவர்கள் தமிழகத்தில் வளரவில்லை, வளர்ந்தது போல சமூக வலைதளத்தில் தங்களை காட்டிக் கொள்கிறார்கள். ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தின் வருங்காலத்திற்கு நல்லதல்ல. ஜாதி - மத பிரச்சனை ஏற்படக்கூடும்.

காந்தியை படுகொலை செய்த நபரின் வாரிசுகள் இங்கே பிரச்சனையை தூண்ட, காந்தியடிகள் பிறந்தநாளில் பேரணியை நடத்த உள்ளனர். அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் நல்லதல்ல.

தமிழகத்தில் நடந்து வரும் தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சுகள் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை யார் செய்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல்.. பெண் நிர்வாகிகளிடம் ஆர்வம் குறைவு.. மாவட்ட செயலாளர் பதவிக்கு ஒருவர் மட்டுமே மனுதாக்கல்

குறிப்பாக பாஜக பிரமுகர் ஒருவர் தன்னுடைய காரில் யாரோ தீ வைத்து விட்டார்கள் என்று புகார் அளித்திருந்தார். பின்னர் விசாரணையில் அவரது காருக்கு அவரே தீ வைத்தது அம்பலமானது. அதேபோல பல இடங்களில் பாஜகவினர் தங்களுக்கு தாங்களே தாக்கிக் கொண்டு பிரச்சனையை ஏற்படுத்த முயன்றதும் பின் விசாரணையில் அவர்களே திட்டமிட்டு நாடகம் ஆடியதும் தெரியவந்தது.

அதனால் தற்போதைய பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் எனக்கு பாஜகவினர் மீது சந்தேகம் இருக்கிறது. PFI, SDPI அமைப்புகளுக்கு IS தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தால் அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அதற்கு நானே அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவினர் அதற்கான ஆதாரங்களை ஏன் வெளியிடவில்லை? IS தீவிரவாத அமைப்போடு PFI, SDPI  அமைப்புகளுக்கு தொடர்பு இருந்தால் அதனை பொதுவெளியில் ஆதரத்தை வெளிக்கொண்டு வராமல் இருப்பது ஏன்?

வேண்டுமென்றே சிறுபான்மையினரை தாக்குவதற்காக பாஜக முயற்சி செய்து வருகிறது. அது தமிழகத்தில் நடைபெறாது’ என தெரிவித்தார்.

First published:

Tags: Thirumavalavan