சாதியவாத, மதவாத சக்திகளால் என் வாக்கு சதவீதம் குறைந்தது - திருமாவளவன்

News18 Tamil
Updated: May 26, 2019, 5:33 PM IST
சாதியவாத, மதவாத சக்திகளால் என் வாக்கு சதவீதம் குறைந்தது - திருமாவளவன்
திருமாவளவன்
News18 Tamil
Updated: May 26, 2019, 5:33 PM IST
சாதியவாத, மதவாத சக்திகளால் தன்னுடைய வாக்கு சதவீதத்தை மட்டுமே குறைக்க முடிந்தது, வெற்றியை தடுக்க இயலவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘‘ஈழத் தமிழர்கள் விடுதலை, மதச்சார்பற்ற கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தன்னுடைய நாடாளுமன்ற செயல்பாடுகள் இருக்கும்.

கம்யூனிச மற்றும் தலித் சித்தாந்தம் கொண்டவர்கள் நாடளுமன்ற அவையில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வலுவாய் நின்று ஒற்றுமையாய் குரல் கொடுப்போம். திமுக தலைவர் ஸ்டாலினுடைய வியூகத்தால் வைத்த குறி தப்பாமல் தமிழகத்தில் மாபெரும் வெற்றி திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ளது.

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய என்னை, நடைபெற்று முடிந்த தேர்தலில் சாதிய மதவாத சக்திகளின் சதியால் வாக்கு சதவிகிதம் குறைந்தது’’ என்று கூறினார்.

மேலும் பார்க்க...

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...