தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும் சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம் - திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 2019ம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது.

 • Share this:

  இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண், நள்ளிரவில் இடிக்கப்பட்டது.


  2009ம் ஆண்டு இறுதிக்கட்ட ஈழப்போரில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த 2019ம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது.


  இந்நிலையில், போரில் உயிர்நீத்த தமிழர்களின் அடையாளமாக விளங்கிய நினைவுத் தூணை இலங்கை அரசு இரவோடு இரவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு இடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “யாழ் பல்கலைக் கழகத்திலுள்ள முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ளனர். சிங்கள இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விசிக வன்மையாக க் கண்டிக்கிறது.

  தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச்
  சிதைக்கும் #சிங்கள_ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் 
  அடையாளம் காப்போம்.” என கூறியுள்ளார்.


  முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்புக்கு தமிழக
  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், மதிமுக பொதுச்
  செயலாளர் வைகோ, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி
  சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை
  ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கண்டனம்
  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arun
  First published: