மொழிப்போர் நடக்கவில்லையென்றால் நாமெல்லாம் ஹிந்தி வாலாவாக மாறியிருப்போம் - திருமா

மொழிப்போர் நடக்கவில்லையென்றால் நாமெல்லாம் ஹிந்தி வாலாவாக மாறியிருப்போம் - திருமா
திருமாவளவன்
  • Share this:
மொழிப்போர் நடைபெறாமல் இருந்திருந்தால் தற்போது நாம் அனைவரும் ஹிந்தி வாலாவாக மாறியிருப்போம் என்று மக்களவை உறுப்பினர் திருமாவளவன் கூறினார்.

சென்னையில் விசிக அலுவலகத்தில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திருமாவளவன் கொடுத்த பேட்டியில், ‘‘திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. தலைவர் கருணாநிதி மறைந்த பின் ஸ்டாலின் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல். தலைவர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ஸ்டாலின்.

அதேபோல் பாஜகவை வீழ்த்தும் அளவிற்கு திமுக சிறப்பாக இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் இந்த வெற்றியை பெற்றுள்ளது. திமுக கூட்டணி அகில இந்திய கவனத்தையும், ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்தத் தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது


தர்மபுரி தொகுதியில் மருத்துவர் செந்தில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக தன்னுடைய முதல் தேர்தலில் இந்த வெற்றியை பெற்றுள்ளார். செந்தில் வன்னியர் சமூகத்தினர் என்பதால் அவரை விசிக ஒதுக்கிப் பார்க்கவில்லை. இதுபற்றி அவதூறு பரப்புவோருக்கு இதனை கூறிக்கொள்கிறேன்.

பள்ளி கல்விக் கொள்கையில் ஒரு வரைவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது அமைச்சரின் கவனத்திற்கு செல்லாமல் வந்திருக்காது. தமிழகத்தின் தனித்துவத்தை பாதுகாக்கும் முயற்சியில் மக்கள் உள்ளதால் தான் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியவில்லை.

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழிப்போர் உள்ளிட்டவை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறாமல் இருந்திருந்தால் தற்போது நாம் அனைவரும் ஹிந்தி வாலாவாக மாறியிருப்போம். மக்கள் எதிர்ப்பின் காரணமாகவே இது நடைபெறாமல் இருந்தது. எனவே எந்தக் காலத்திலும் ஹிந்தி திணிப்பை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இது வெறும் ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல கலாச்சார திணிப்பு முயற்சி’’ என்றார் திருமாவளவன்.
First published: June 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்