மன அழுத்தமில்லாமல், துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள், நீட் ஒரு தேர்வே இல்லை., தற்கொலை அதற்கு தீர்வில்லை - தொல். திருமாவளவன்

மன அழுத்தமில்லாமல், துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள், நீட் ஒரு தேர்வே இல்லை., தற்கொலை அதற்கு தீர்வில்லை - தொல். திருமாவளவன்

திருமாவளவன்

பெற்றோரின் மனம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் துணிவுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் திடம் வேண்டும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

 • Share this:
  நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பதற்றம் கொள்ளவேண்டாம். துணிவாக தேர்வை எதிர்கொள்ள வேண்டாம். எதிர்மறை எண்ணத்துடன் தேர்வறைக்குள் செல்லாதீர்கள் என நீட் தேர்வு மாணவர்களுக்கு விசிக தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

  நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்காக இன்று அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “மாணவச் செல்வங்களே, நீட் தேர்வை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். பதற்றம் வேண்டாம். எதிர்மறை எண்ணத்துடன் தேர்வறைக்குள் செல்லாதீர்கள். மனக்குழப்பம், மன அழுத்தமில்லாமல் துணிவாக தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

   

   

  Posted by Gunavathy M on Saturday, September 12, 2020


  மருத்துவக்கல்வி கிடைக்காமல் போனால் என்ன ஆவது? பெற்றோர்களை ஏமாற்றியதாக ஆகிவிடுமா? என்ற எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம். தேர்வில் வெற்றி பெறாமல் போனாலுமே அதற்காக வருந்தத் தேவையில்லை. இந்த தேர்வு நம் ஆளுமையை நிர்ணயிக்காது.

  மருத்துவராவது மட்டுமே நம்முடைய கனவாக இருக்கத் தேவையில்லை. எந்த நிலையிலும், நம்மால் சமூகத்தின் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்னும் துணிவு தேவை.

  மேலும் படிக்க: பெற்றோரின் வலியை எதுவும் சரிசெய்யாது.. நம்பிக்கையோடு வாழ்ந்துகாட்டுவதில்தான் அன்பு இருக்கிறது - கனிமொழி எம்.பி.,

  நேற்று ஒரு நாளில் மூன்று உயிர்களை இழந்திருக்கிறோம். பெற்றோரின் மனம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் துணிவுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் திடம் வேண்டும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
  Published by:Gunavathy
  First published: