ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி : திருமாவளவன் அறிவிப்பு..

அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி : திருமாவளவன் அறிவிப்பு..

திருமாவளவன்

திருமாவளவன்

அக்டோபர் 11ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி நடைபெறும் என அறிவித்தார். இதற்கு தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  காந்திய ஜெயந்தி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விசிகவின் சமூக நல்லிணக்க மனித சங்கிலி காவல்துறை தடை காரணமாக அக்டோபர் 11ம் தேதி நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

  மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 02ம் தேதி சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

  இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் 02 ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சமூகத்தில் உருவாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்விற்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.

  இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறையினர் விளக்கியது எனவும் மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டது எனவும் தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: ஓசில போகமாட்டேன் என பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு? காவல்துறை விளக்கம்!!.

  அதன் அடிப்படையில், அக்டோபர் 11ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி நடைபெறும் என அறிவித்தார். இதற்கு தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஆதரவு தரும் கட்சிகள்:

  1)தேமுதிக

  2) இந்திய தேசிய லீக்

  3) எஸ்டிபிஐ

  4)நாம் தமிழர் கட்சி

  5)சிபிஐ (எம்.எல்- விடுதலை)

  6)தமிழ்ப் புலிகள் கட்சி

  7)அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்

  8)அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்

  9)தமிழர் விடியல் கட்சி

  10)பீமாராவ் குடியரசு கட்சி

  ஆதரவு அளிக்கும் இயக்கங்கள்:

  1) திராவிடர் விடுதலை கழகம்

  2) த.பெ.தி.க

  3) மக்கள் அதிகாரம்

  4) மே17 இயக்கம்

  5)காஞ்சி மக்கள் மன்றம்

  6) புலிப்படை

  7)தமிழ்நாடு இளைஞர் சங்கம்

  8)தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு

  9) திசம்பர் 3 இயக்கம்

  10) தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச்சங்கம்

  11) தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு

  12) இந்திய தவ்ஹீத் ஜமாத்

  13) மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: DMDK, RSS, Seeman, Thirumavalavan, VCK