TN Assembly Election Results 2021 : திருப்போரூர் தொகுதியில் விசிக முன்னிலை.. பாமக பின்னடைவு

TN Assembly Election Results 2021 : திருப்போரூர் தொகுதியில் விசிக முன்னிலை.. பாமக பின்னடைவு

திருமாவளவன், எம்பி

திருப்போரூர் தொகுதி 6 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி 1,7390 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

  • Share this:
    திருப்போரூர் 6 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி 4,899 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

    திருப்போரூரில் பாமக வேட்பாளர் கே. ஆறுமுகம் 1,2491 வாக்குகளும், அமமுக வேட்பாளர் கோதண்டபாணி 1,370 வாக்குகளும் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகன சுந்தரி 5,073 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் லாவண்யா 2,823 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 354 வாக்ககள் என 6 ஆம் சுற்றில் மொத்தம் 39,929 வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்நிலையில், செஞ்சி தொகுதி 10ஆம் சுற்று முடிவில், திமுக வேட்பாளர் மஸ்தான் 13,375 வாக்குகள் முன்னிலையில் இருகிறார். அதன்படி, திமுக 40,611 வாக்குகளும், பாமக 27,236, அமமுக 1,521, நாம் தமிழர் கட்சி 3, 947 மற்றும் மநீம 660 வாக்குகளையும் பெற்றுள்ளன.

    Must Read : பாமக முன்னிலை பெறும் தொகுதிகள் எவை?

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி 5-ஆம் சுற்று முடிவில், பாமக தலைவர் ஜி.கே.மணி 22,993 வாக்குகள் பெற்று 7,388 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். அங்கே திமுக வேட்பாளர்15,605 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
    Published by:Suresh V
    First published: