சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது: காதல் வெல்லும் - திருமாவளவன்

சாதிவரம்புகளைத் தாண்டி தன் மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள் என்றும், காதல் வெல்லும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சனாதனிகளை அச்சுறுத்தும் நாள் இது: காதல் வெல்லும் - திருமாவளவன்
திருமாவளவன் எம்.பி.,
  • Share this:
சாதிவரம்புகளைத் தாண்டி தன் மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள் என்றும், காதல் வெல்லும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் தருமபுரியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளவரசன், திவ்யா காதல் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு, சில நாட்களில் திவ்யாவின் அப்பா தற்கொலை செய்துகொண்டார். காதல் திருமணம் இரு குடும்பங்களுக்கும் இடையிலான பிரச்சனை, சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாறி பட்டியலினத்தவர்கள் வாழும் நாயக்கன்கொட்டாய் பகுதியில் வன்முறை நடத்தப்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின. மனைவி திவ்யாவின் குடும்பத்துக்கும் இளவரசனுக்கும் இடையில், சட்ட ரீதியாக வாதங்கள் நடந்துவந்த நிலையில், இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை அல்ல தற்கொலைதான் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading