சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு - வன்னியரசு

சாத்தான்குளம்  விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையே போதும், சிபிஐ விசாரணையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தொடர்பு - வன்னியரசு
போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர்
  • Share this:
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் துணை பொது செயலாளர் வன்னியரசு தலைமையில் வாசல் இருப்பு போராட்டம் நடைபெற்றது அக்கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்பொழுது பேசிய வன்னியரசு தூத்துக்குடி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இன்னும் அதற்கு  நியாயம் கிடைக்கவில்லை. சாத்தான்குளம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் சிபிசிஐடியே தொடர்ந்து விசாரிக்க வேண்டும். 

இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு அச்சம்பவத்தில் தொடர்பு உள்ளது அவர்களை விசாரிக்கவில்லை.

Also read... இது வழக்கமான லாக்-அப் மரணங்கள் போல் இல்லை.. அமைச்சர் சி.வி சண்முகம்..விசாரணைக்கு சாட்சியளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவருக்கு மாற்று பணி வழங்க வேண்டும் எனவும் வன்னியரசு கூறினார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading