Home /News /tamil-nadu /

விசிகவுக்கு நகர்மன்ற தலைவர் பதவி - திமுக நிர்வாகிகள் அதிருப்தி... 20 கவுன்சிலர்கள் கடத்தல்?

விசிகவுக்கு நகர்மன்ற தலைவர் பதவி - திமுக நிர்வாகிகள் அதிருப்தி... 20 கவுன்சிலர்கள் கடத்தல்?

திருமாவளவன்

திருமாவளவன்

நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியதால் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக வி.சி.க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    தி.மு.க கூட்டணியில் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில், 20 கவுன்சிலர்களை கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரியுள்ளது.

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில், தி.மு.க 11 இடங்களை கைப்பற்றியது. மேலும், வி.சி.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா 2 இடங்களையும், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலா ஓர் இடத்தை வசப்படுத்தின. இதன் மூலம் நெல்லிக்குப்பம் நகர சபைத் தலைவர் பதவி மற்றும் துணைத் தலைவர் பதவியை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.

    இதுவரை ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிகுப்பம் நகரசபை தலைவர் பதவி, தற்போது பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இருப்பினும், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே, தி.மு.க தலைமை ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கார்த்தி சிதம்பரத்துக்கு பத்தாண்டுகள் செல்லக்கூடிய பாஸ்போர்ட் வழங்கவேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

    இதனிடையே, நேற்று நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நகராட்சித் தலைவர் பதவி வழங்கியதால், தி.மு.க நகர நிர்வாகிகள் சிலர், கவுன்சிலர்களை கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக நிர்வாகிகள் கோரியுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: DMK, VCK

    அடுத்த செய்தி