தமிழகத்தில் தமிழை படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலை தமிழை அழிக்கும் - திருமா

தமிழகத்தில் தமிழை படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலை தமிழை அழிக்கும் - திருமா
திருமாவளவன்
  • Share this:
தமிழகத்தில் தமிழை படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலை, தமிழை மெல்ல மெல்ல அழிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

காயிதேமில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த திருமாவளவன், ‘‘தமிழகத்தில் மதவெறி, சாதி வெறி அரசியலுக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. திமுக கூட்டணி இமாலய வெற்றி பெற மதசார்பற்ற சக்திகளே காரணம்.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதேமில்லத். மதவெறி, சாதி வெறிக்கு எதிராகவும் இந்திய அரசியல் அமைப்பை பாதுகாக்கவும் உறுதியேற்போம்’’ என்றார்.


முதல்வர் ட்விட் குறித்த கேள்விக்கு, ‘‘முதல்வர் இப்படி கூறுகிறார் என்றால் இந்தி மொழியை மூன்றாவது மொழியாக தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள வாசல் திறக்கிறார் என்றே அட்த்தம். இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழியை படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டம் பெரும் நிலை உள்ளது. இது வரும் காலத்தில் தமிழ் மொழி அழிய வகை செய்யும். எனவே இதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். எந்தக் கொள்கையை பாரதி எதிர்த்தாரோ அதையே அவர் மீது பூசுவது அவருக்கு எதிரானது.

ஹெச்.ராஜா, ஓவியர் வரைந்தது என்று கூறுவது மழுப்பலான பதில். இது பாரதியை அவமானம் செய்வதற்கு சமம். ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது அவர்கள் விரும்பும் கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி.

தமிழகத்தில் தமிழை படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. இந்தநிலை மெல்ல மெல்ல தமிழை அழிக்கும், எனவே தமிழக அரசு இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் மறைந்திருக்கும் நோக்கம் என்ன என்றும், இதன் மூலம் தமிழக அரசில் காவி எந்த அளவு உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது ஒரு தமிழர் விரோத நடவடிக்கை மட்டுமல்ல, இது பாரதியை கொச்சைப்படுத்தும் செயல் இழிவுபடுத்தும் செயல்.

மும்மொழி வரைவு அறிக்கை என்பது ஒரு முன்னோட்டம் தான், தமிழகத்தில் எதிர்ப்பை தொடர்ந்து விருப்பப்படி மாணவர்கள் படிக்கலாம் என்று கூறி இருப்பதும் ஒரு நழுவல் வாதம் தான்’’ என்று கூறினார்.
First published: June 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்