முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருமாவளவன் மீதான வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் மனுஸ்மிருதியை தடை செய்யக் கோரியும் விசிக ஆர்ப்பாட்டம்

திருமாவளவன் மீதான வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் மனுஸ்மிருதியை தடை செய்யக் கோரியும் விசிக ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனுஸ்மிருதி நூலை எரித்து விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பெரியாரும் இந்திய அரசியலும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனுஸ்மிருதி பெண்களை இழிபடுத்துவதாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதனைக் கண்டித்தும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யக்கோரியும் அக்கட்சியின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Also read: புதுச்சேரியில் திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கலந்துகொண்டு மனுஸ்மிருதி நூலை தடை செய்யவேண்டும் என்றும் திருமாவளவன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், மனுதர்மம் நூலை தீயிட்டு எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

First published:

Tags: Thol. Thirumavalavan, VCK, Villupuram