தமிழ் பெயரை தார் பூசி அழித்த வாட்டாள் நாகராஜ் கைது: நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் பரபரப்பு

வாட்டாள் நாகராஜ்

தமிழ் எழுத்துக்கள் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தார் பூசி அழிக்கப்பட்டது.

 • Share this:
  கர்நாடகாவில் தமிழ் பெயரை தார் பூசி அழித்த வாட்டாள் நாகராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  கோலார் தங்க வயல் பகுதியில் வசிப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்கள் என்பதால் அங்குள்ள பேருந்து நிலையத்தின் பெயர் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது.

  இந்நிலையில் ராபர்ட்சன்பேட்டை பேருந்து நிலையத்தில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்கள் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தார் பூசி அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்தனர்.

      

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: