சத்தியமங்கலம் அருகே தமிழ்ப் பெயர் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜ்

சத்தியமங்கலம் அருகே தமிழ்ப் பெயர் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜ்

ஆதரவாளர்களுடன் வாட்டாள் நாகராஜ்

நெடுஞ்சாலைத் துறையின் வைத்திருந்த, தமிழில் எழுதப்பட்ட பெயர் பலகையை அடித்து உடைத்து சேதப்பட்தியுள்ளர்.

 • Share this:
  கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், கன்னட அமைப்பினர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக எல்லையில் நுழைந்து, நெடுஞ்சாலைத் துறையினர் வைத்திருந்த, தமிழில் எழுதப்பட்ட பெயர் பலகையை அடித்து உடைத்து சேதப்பட்தியுள்ளர்.

  சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ளது ராமாபுரம். இங்கே நெடுஞ்சாலைத்துறையினர் ‘தமிழ் மாநில எல்லை முடிவு’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையை சாலை ஓரத்தில் வைத்திருந்தனர்.

  அதில், எழுதப்பட்ட வாசகம் கன்னட மொழி இடம்பெறவில்லி என்று கூறி, அந்த பெயர் பலகையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளர். அங்கே வாட்டாள் நாகராஜன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  Published by:Suresh V
  First published: