சென்னையில் ஆண்களுக்கு கருத்தடை முகாம்... விருப்பமுள்ளவர்களுக்கும், அழைத்து வருவோருக்கும் ஊக்கத்தொகை அறிவிப்பு

சென்னையில் ஆண்களுக்கு கருத்தடை முகாம்... விருப்பமுள்ளவர்களுக்கும், அழைத்து வருவோருக்கும் ஊக்கத்தொகை அறிவிப்பு

ஆண்களுக்கான கருத்தடை

Vasectomy Awareness Camp in Chennai | சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 04-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 • Share this:
  நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலைபோய் இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலை இருந்தாலும் காலம் காலமாக குழந்தை பெற்றுக் கொண்ட பின் கருத்தடை செய்து கொள்வது பெரும்பாலும் பெண்கள் தான். பெண்களை விட ஆண்கள் கருத்தடை செய்து கொள்வது மிக எளிதானது என்றும், உடல் நலத்துக்கு சிறந்தது என்றும் மருத்துவர்கள் கூறினாலும் பெரும்பாலான ஆண்கள் கருத்தடை செய்து கொள்ள முன்வர தயங்குகின்றனர்.

  இந்நிலையில் சென்னை ராயபுரம் மண்டலம், திருவிக நகர் மண்டலம், அடையாறு மண்டலம் ஆகிய 3 மையங்களில் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை முகாம் நடைபெற உள்ளது.

  இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனங்களை ஆணையாளர் கோ.பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார்.

  மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில், நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு ரூ.1100 மற்றும் ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200 ஊக்கத்தொகையாக வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  முகாம் நடைபெறும் இடங்களும் தொடர்பு எண்களும்

  இராயபுரம் மண்டலம் - 9445190711

  நகர்ப்புற சமுதாய நல மையம் - 9445190712

  சஞ்சீவராயன் பேட்டை - 9445190713

  எண்.194, சோலையப்பன் தெரு - 9445190714

  பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21 - 9445190715

  திருவிக நகர் மண்டலம் - 9445190716

  புளியந்தோப்பு நகர்ப்புற சமுதாய நல மையம் - 9445190717

  எண்.40 திருவேங்கடசாமி தெரு - 9445190718

  புளியந்தோப்பு, சென்னை -42 - 9445190719, 9445190720

  அடையாறு மண்டலம் - 9445190721

  அடையாறு நகர்ப்புற சமுதாய நல மையம் - 9445190722

  எண்.2 வெங்கட் ரத்னம் நகர் - 9445190723

  அடையாறு, சென்னை -20 - 9445190724, 9445190725  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sheik Hanifah
  First published: