வசந்தகுமார் மூத்த சகோதரர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வசந்தகுமார் மூத்த சகோதரர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி
வசந்தகுமார் - குமரி அனந்தன்
  • Share this:
கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மூத்த சகோதரர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி, எம்.பி. வசந்தகுமார் காலமானார். இவருக்கு வயது 70. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் நுரையீரலில் தொற்று அதிகாரித்தது. மேலும், நுரையிரலில் சளி அதிகமானதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பாடார்.


வயது மூப்பு காரணமாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பிரச்சனை இருந்ததன் காரணமாகவும் நோயின் வீரியம் அதிகரித்து நுரையிரல் செயலிழக்கும் அளவிற்கு சென்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சுயநினைவு இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இன்று மேலும் அவரது உடலை மேசமடைந்து கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.வசந்தகுமார் உயிரிழந்த செய்தி கேட்ட அவரது மூத்த சகோதரர் குமரிஅனந்தன் மிகவும் அதிர்ச்சியடைந்து மனவேதனை அடைந்தார். இதனால் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டதால் ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குமரிஅனந்தனனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் என்பது குறிப்பிடதக்கது.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading