கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக உள்ள வசந்தகுமார் காங்கிரஸ் சார்பில் இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கன்னியாகுமரியைப் பொறுத்த வரையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைப் போல் இல்லாமல் தேசியக் கட்சிகளுக்கான முக்கியத்துவம் அங்கு அதிகம். இதனாலே அதிமுக கூட்டணி சார்பில் பாஜக-வின் பொன்.ராதாகிருஷ்னன் கன்னியாகுமரியில் வசந்தகுமாருக்கு எதிராகப் போட்டியிட்டார்.
இருவருக்கு சொந்த மாவட்டம் கன்னியாகுமரிதான். சாதி ஓட்டுகளும் இருவருக்கும் சமம்தான். ஆனால், வசந்தகுமாருக்கான ஆதரவு தொடக்கத்திலிருந்தே அதிகப்படியாகவே உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனை விட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.
அப்போது திமுக உடனான கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தனித்துத்தான் களம் கண்டது. இம்முறை திமுக உடனான கூட்டணி இருந்ததால் வசந்தகுமாரின் வெற்றி மிகவும் பிரகாசமாகவே இருந்தது.
புயல், மீனவர்கள் பிரச்னை, மத்திய அரசின் மீதான வெறுப்பு, பாஜக எதிர்ப்பலை இவை அனைத்தும் வசந்தகுமாரின் வெற்றிக்குக் கூடுதல் பலம் சேர்த்தன.
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.