”இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாது அண்ணாச்சி” - ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி MP

மறைந்த வசந்தகுமாருக்கு கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ”இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாது அண்ணாச்சி. அதிர்ச்சியில் இருந்து விடுபடவே முடியவில்லை. உங்கள் புன்னகையும், தன்னம்பிக்கையும், உழைப்பும், கட்சியின் மீதான பற்றும் காலத்தால் அழியாதது.  அண்ணாச்சியின் குடும்பத்திற்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் இது தனிப்பட்ட இழப்பு. ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆன்மா அமைதிகொள்ளட்டும்.”

  தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்குப் பிறகு, பொதுமக்கள் அஞ்சலிக்காக சத்தியமூர்த்திபவன் வளாகம் முன்வைக்கப்பட உள்ளது அவரது உடல். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், வசந்தகுமாரின் சொந்த ஊரான நாங்குநேரியில் உள்ள அகத்தீஸ்வரத்தில் 30.08.2020 அன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Rizwan
  First published: