வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள் ஒடதுக்கீடு அளித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நவம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிமன்றம் இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், இது புதியதாக வழங்கப்பட்ட ஒதுக்கீடு அல்ல. எனவே, நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு விதிகள் எதுவும் இந்த உள் ஒதுக்கீட்டால் மீரப்படாது.ஏற்கனவே மிகவும் பிறப்பிடுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது - துரைமுருகன்
இதனால், வன்னியர் பிரிவின் கீழ் வரும் 7 பிரிவினர் பயனடைவர்.
ஏற்கனவே இதே போல பிறப்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாகவும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பயணிகளை தண்டிப்பது நியாயமல்ல..ரயில்வே வாரியத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதி கிடைக்கும் வகையில் தான் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, உள் ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வழிவகுக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.