முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு - அமைச்சர் தகவல்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு - அமைச்சர் தகவல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவோம் என்றும் பொன்முடி குறிப்பிட்டர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு வழங்கும்  சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது. வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்புக்கு பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டிற்கு செல்கிறது எனவும், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், 7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் சேர்க்கை பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அமைச்சர் பொன்முடி,  ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: கூடுதல் பேருந்து சேவை...கொட்டும் மழையிலும் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருக்கும் மக்கள்!

இந்தத் தேர்வானது ஏற்கனவே 120 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 200 மையங்களில் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .தேர்வு எழுதும் மாணவர்கள் 100 கி.மீ க்குள் உள்ள மையங்களில் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நவம்பர் மாதத்தில் வங்கி தேர்வு மற்றும் நெட் தேர்வு எழுதுபவர்களுக்கும் வசதியாக வரும் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

எனவே தேர்வர்கள் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், 1060 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கு, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

top videos

    மேலும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட தலைமை செயலாளர்!

    First published:

    Tags: Madurai High Court, Tamilnadu government, Vanniyar Reservation