• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை எதிர்காலத்தில் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

  • Share this:
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சி ஏ ஏ, என்.ஆர்.சி , என்.பி.ஆர்க்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 14ஆம் தேதி இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை தொடங்கினர். ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என அதிகளவில் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

தமிழக அரசு சி ஏ ஏ, என்.ஆர்.சி , என்.பி.ஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,பிரமுகர்கள் இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மேலும் தங்களின் கோரிக்கையை ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் அரசிற்கு தெரிவிக்கும் விதமாக பலூன் விடுவது, ஒரு விரல் புரட்சி என்று எழுதி எதிர்ப்பு தெரிவிப்பது, புறாக்கள் மூலம் தூது விடுவது என தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் உலகமெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக  ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் சார்பாக கூட்டம் கூட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து 33 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக போராட்ட குழு தலைவர் லத்திப் அறிவித்தார் மேலும் இறுதியில் தேசிய கீதம் பாடி முடிந்தவுடன் அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வண்ணாரப்பேட்டை போராட்டக்குழு தலைவர் லத்திப்,
கடந்த 14ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று 33-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசு கொண்டுள்ள சி ஏ ஏ, என்.ஆர்.சி , என்.பி.ஆர் என்பதே ஒரு பெரிய கொரோனா அதனால் அதனை எதிர்த்து போராடி வந்தோம். இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயால் மக்கள் நலன் கருதி எங்க கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து மக்களின் பாதுகாப்பு கருதி இந்த போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக முடிவு செய்துள்ளோம்.

தற்போது தமிழ்நாடு அரசு என்பிஆர் கணக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ளது. மீண்டும் அதனை கொண்டு வந்தால் எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.

Also see....

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: