திருப்பத்தூர்: மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய பள்ளத்தில் சிக்கி 11 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாலாற்று வெள்ளத்தில் இறங்கிய 11 வயது பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளான்.

- News18 Tamil
- Last Updated: November 27, 2020, 7:40 PM IST
திருப்பத்தூர் மாவட்டம் நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்றில் பாலத்தைக் கடந்து மழை நீர் பாய்ந்து ஓடுகிறது. தண்ணீரைக் காண ஏராளமான மக்கள் பாலத்தின் மீது திரண்டு கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்தீஷ் ஆற்று நீரில் இறங்கி விளையாடியபோது, அப்பகுதியில் மணல் திருடர்கள் ஏற்படுத்திய ஆபத்தான பள்ளத்தில் சிக்கினார்.
இதையடுத்து பள்ளத்திலிருந்து அந்தச் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். பின்னர் தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, பாலாற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், ஆபத்தை உணராமல் யாரும் ஆற்றில் இறங்கவேண்டாம் என்றும் உதயேந்திரம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்