Vandalur Zoo | வண்டலூரில் கொரோனா பாதித்த மற்றொரு சிங்கம் உயிரிழப்பு

மாதிரிப் படம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த மற்றொரு சிங்கம் உயிரிழந்துள்ளது.

  • Share this:
    கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்களுக்கு கடந்த 26-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. பசியின்மை ஏற்பட்டதுடன், சில நேரங்களில் இருமல் பாதிப்பும் இருந்தது. இதையடுத்து, பூங்காவில் உள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

    மேலும், மூக்கு சளி மற்றும் குடல் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய்களுக்கான தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில், 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம் 3-ம் தேதி உயிரிழந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பு மனிதர்களுக்கு மட்டுமே உயிரிழப்புகளை ஏற்படுத்திவந்த நிலையில், சிங்கத்தையும் உயிரிழக்கச் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதனையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்கா, முதுமலை யானைகள் சரணாலயத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மிருகக்காட்சி சாலைக்குச் சென்று விலங்குகளைப் பார்வையிட்டார். கொரோனா பாதித்த மற்ற சிங்கங்கள் தீவிர கண்காணிப்பில் இருந்துவந்தன. இந்தநிலையில், கொரோனா பாதித்த மற்றொரு ஆண் சிங்கமும் உயிரிழந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதொடர்பாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்க உலாவிடம் பகுதியில் 12 வயதுள்ள பத்பநாதன் என்ற ஆண் சிங்கம் இன்று காலை 10.15 மணியளவில் உயிரிழந்தது. இந்த சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கடந்த 3-ம் தேதி கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: