சென்னை: லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழப்பு..

மாதிரிப்படம்.

வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உள்ளிட்ட இருவர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 • Share this:
  சென்னையை அடுத்த வண்டலூர் - கேளம்பாக்கம் பிரதான சாலை சோனலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் உள்ளிட்ட இருவர் வாகன விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னை மனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான வசந்த்குமார், 25 வயதான துர்காதேவி ஆகிய இருவரும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி பலமாக மோதியதில் இருவரும் சாலையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் கிடந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

  இந்தத் தகவலை அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: