வண்டலூர் உயிரியல் பூங்காவில் திருடுபோன 2 ஆண் அணில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பூங்கா ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்நிலையில், அரியவகை உயிரினமான 2 அணில் குரங்குகள் கடந்த 8ம் தேதி காணாமல் போனதாக பூங்கா ஊழியர்கள் வனசரகர் வாசு என்பவரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் வனச்சரகர் அணில் குரங்குகள் வைக்கப்பட்டிருந்த கூண்டினை பார்த்த போது கம்பிகள் நறுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 8ம் தேதி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பூங்காவின் ஒப்பந்த ஊழியரான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சத்தியவேல்(34), என்பவரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க - ஓசி சரக்கு, சைடிஷ் கேட்டு இளைஞர் தகராறு... அடித்து கொன்ற டாஸ்மாக் பார் ஊழியர்கள்..
அப்போது தனது நணபர் ஜானகிராமன்(எ) ஜான்(21), என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி திருடி விற்பனை செய்ய முடிவு செய்து கடந்த 7ம் தேதி ஜான் பூங்காவிற்குள் பார்வையாளர் போல் வந்து ஊழியர்கள் அனைவரும் சென்ற பிறகு அங்கேயே பதுங்கி இருந்து கட்டர் உபகரணத்தால் கூண்டினை நறுக்கி அணில் குரங்குகளை திருடி பையில் போட்டுக் கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார்.
இதையும் படிங்க - தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.. படகுகளும் சிறை பிடிப்பு
அணில் குரங்குகளை விற்பனை செய்வதற்காக லோகநாதன் (எ) சூர்யாவிடம் கொடுத்துள்ளார். சூர்யா, வினோத்(29), என்பவருக்கு 4 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.வனவிலங்கு சட்டப்படி அரியவகை விலங்கினங்களை வாங்குவதும், விற்பதும் சட்டத்திற்கு புறம்பானது.
இதையும் படிங்க - அப்பார்ட்மெண்டில் 'லிவிங் டூகெதர்' ஜோடி திடீரென தீக்குளிப்பு.. சென்னையில் பரபரப்பு சம்பவம்
எனவே, நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு ஆண் அணில் குரங்குகளை மீட்டு பூங்காவில் விட்டனர்.களவு போன அரியவகை அணில் குரங்குகளை மீட்ட தனிப்படை போலீசாரை தாம்பரம் ஆணையர் ரவி பாராட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vandaloor zoo