ரஜினிகாந்த் அரசியலை கைவிட்டது ஏமாற்றம் அளித்தது - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழகம் பெருமைப்படும் வகையில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் ரஜினிகாந்த் அரசியலை கைவிட்டது ஏமாற்றம் அளித்தது எனவும் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழகம் பெருமைப்படும் வகையில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் ரஜினிகாந்த் அரசியலை கைவிட்டது ஏமாற்றம் அளித்தது எனவும் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

  காந்திபுரம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “தமிழகம் பெருமைப்படும் வகையில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. ஆன்மிக அரசியல் என்ற மக்கள் விரும்பும் அரசியலை ரஜினிகாந்த் கைவிட்டது ஏமாற்றம் அளித்தது. பொருத்தமான நபருக்கு விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி.

  ‘யாகவாராயினும் நா காக்க’ என திருக்குறளை உதாராணம் காட்டிய கமல்ஹாசனுக்கு, இந்த திருக்குறள், என் மீது மக்கள் நீதி மய்யத்தினர் விமர்சனம் செய்யும்போது ஏன் நியாபகம் வரவில்லை மைக் வேலை செய்யாததால் கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசியது, அவர் பொறுமை, பக்குவம் பெறவில்லை என்பது காட்டுகிறது. சிறிய ஏமாற்றத்தைகூட தாங்கி கொள்ள முடியாதவர் என்பதை காட்டுகிறது.

  மக்கள் வெற்றி, தோல்வி எதை தந்தாலும், மக்களுக்கு உழைப்பதுதான் அரசியலுக்கு அடிப்படை. 66 வயதான தனக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கும் கமல், நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும்.

  திமுகவினர் காவல்துறை, பொதுமக்களை மிரட்டுகின்றனர். வன்முறை அரசியலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. அதிகாரிகள் நடுநிலையோடு நடக்க தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்க வேண்டும்.

  டிவிட்டர் அரசியல்வாதி கமல்ஹாசன், நேரடியாக எத்தனை நாள் மக்களோடு இருந்துள்ளார், களத்தில் நின்று கமல்ஹாசன் என்ன செய்தார், கோவை அமைதிப் பூங்காவாக நிலவ வேண்டும் என அனைத்து தரப்பினரும் முயற்சிக்கின்றனர். பாஜக அத்தனை தரப்பு மக்களுக்குமான கட்சி கோவையில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்க வில்லை.

  Must Read :  ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

   

  திமுக ஆட்சியில்தான் கோவையில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. அதற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். கோவையில் ஊர்வலத்தின் போது செருப்புக்கடையில் கல் வீசியது சிறு சம்பவம். அதை ஊதி பெரிதாக்குவது யார், பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனியை திமுக கண்டித்ததா? சினிமா அல்ல அரசியல், அரசியல் கடமையல்ல சேவை.” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: