• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வு வேண்டாம் என்று கேரளா, ராஜஸ்தான் முதலமைச்சர்கள் சொல்வார்களா? - வானதி சீனிவாசன் கேள்வி

நீட் தேர்வு வேண்டாம் என்று கேரளா, ராஜஸ்தான் முதலமைச்சர்கள் சொல்வார்களா? - வானதி சீனிவாசன் கேள்வி

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

நீட்தேர்வு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

  • Share this:
    மாணவர்களை ஏமாற்றாமல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு திமுக ஆட்சி புரிய வேண்டும் என்று கூறியுள்ள பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா, காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் ஆகிய மாநில முதலமைச்சர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    திருப்பூரில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச வன்முறை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார் . காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டத்தில் இரட்டை வேடம் போட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி காங்கிரஸ் கட்சி தனது செத்துப்போன கட்சியை வளர்த்தெடுக்க முயற்சி எடுத்து வருகிறது. வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் வாழ்க்கை உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி அதனை தடுக்க முயல்கிறது.

    தமிழக முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினாலும் நீட்தேர்வு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இன்னமும் மாணவர்களை ஏமாற்றாமல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு திமுக ஆட்சி புரிய வேண்டும். தன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா மற்றும் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் முதல்வர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வார்களா? என்று கூறினார்.

    முன்னதாக, திருப்பூரில் பாஜக சாதனைகளை விளக்கி நடைபெறும் ஓவியப் போட்டியை வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.

    Must Read : பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்ய உரிய விதிகளை வகுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்று பட்டு செயல்பட வலியுறுத்தியும் நேற்று 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: