Home /News /tamil-nadu /

மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது திமுக அரசுக்கு நல்லது - வானதி சீனிவாசன்

மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது திமுக அரசுக்கு நல்லது - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan : இறைவனை வணங்க மொழி தடையாக இருக்க கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்பது கட்டாயமில்லை என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ள நிலையில், அரசு மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்பது இப்போதுதான் திமுக அரசுக்கு மெல்ல புரிய துவங்கி இருக்கின்றது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “அன்னை தமிழில் அர்ச்சனை” என்பது கட்டாயமில்லை எனவும் வாய்ப்புள்ள இடங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் இந்த கருத்து குறித்து, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது இறைவனை வணங்க மொழி தடையாக இருக்க கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

அதே வேளையில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் உரிமை சார்ந்தது எனவும் ஏற்கனவே கோவில்களில் “தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என போர்டு வைக்கப்பட்டு இருக்கின்றது எனவும், பக்தர்கள் விரும்பினால் தமிழிலும் அர்ச்சனை செய்து கொடுக்கின்றனர் எனவும் தமிழில் மட்டுத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

மக்களாக விரும்பி ஏற்றுகொள்ளாத வரை இதை அமல்படுத்துவது கடினம் என, அமைச்சர் சேகர்பாபு சொல்லி இருப்பது சரியானது என தெரிவித்த அவர், இது பக்தர்களின் உணர்வு தொடர்பான விஷயம் எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய கேட்டு, அதை செய்ய மறுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முதலில் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை தெரிவித்த அரசு இப்போது கட்டாயமில்லை என நிலைப்பாடு மாற்றம் செய்து இருக்கின்றதா? என்ற கேள்விக்கு, ஏதார்த்தம் என்ன என்பதை அரசு புரிந்து இருக்கின்றது எனவும், தமிழில் இறைவனை வழிபட அனைத்தும் இருக்கின்றது என தெரிவித்தார்.

Must Read : பிஐ சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை: ப.சிதம்பரம் ட்விட்

அதேசமயம், அதற்காக இன்னொரு மொழியை புறக்கணிக்க தேவையில்லை என தெரிவித்த அவர், தமிழ் நம் தாய் மொழி, சமஸ்கிருதமும் நம் நாட்டின் மொழி என தெரிவித்த அவர், யாருக்கு எதில் விருப்பமோ அதில் வழிபாடு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசு மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது எனவும், அது இப்போதுதான் தமிழக அரசுக்கு மெல்ல புரிய துவங்கி இருக்கின்றது எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: BJP, DMK, Minister Sekar Babu, Tamil News, Tamilnadu, Vanathi srinivasan

அடுத்த செய்தி