ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை- வெளிநடப்பு குறித்து வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம்

நீட் விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை- வெளிநடப்பு குறித்து வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

நீட் விலக்கு தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

  இதில், திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி, மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸின் செல்வபெருந்தகை, .விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனைச் செல்வன் மற்றும் பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி - ஜி.கே. மணி, பாரதி ஜனதா கட்சி - வானதி சீனிவாசன், புரட்சி பாரதம் - பூவை ஜெகன்மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், மதிமுக - சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - தளி ராமசந்திரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.

  அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு: பாஜகவை தவிர்த்து 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு

  பா.ஜ.க சார்பில் பங்கேற்ற வானதி ஸ்ரீனிவாசன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ''மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதன் பேரில் பாஜக சார்பில் நான் கலந்துகொண்டேன். கூட்டம் தொடங்கியதும், நீட் தேர்வு விவகாரத்தில் எங்கள் கட்சியின் நிலைபாட்டை தெரிவித்துவிட்டு, இந்த தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என கூறிவிட்டு வெளிநடப்பு செய்துள்ளோம்.

  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது" என்று தெரிவித்தார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: BJP, Vanathi srinivasan