தனித்தேர்வர்களுக்கும் ஆல் பாஸ் போடுங்க.. வானதி சீனிவாசன் கோரிக்கை

வானதி சீனிவாசன்

ஒன்றரை லட்சம் மாணவர்கள்  தனித்தேர்வர்களாக பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் தேர்ச்சி அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கான தேர்வும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தேர்வு நடத்தி நவம்பரில் முடிவுகளை அறிவித்தால் மாணவர்கள் எப்போது உயர் கல்வியில் சேர்வார்கள்.

 • Share this:
  தமிழகத்தில் 10 மற்றும் 12 ம்வகுப்பு படிக்கும் தனிதேர்வர்களை ஆல்பாஸ் என அறிவிக்க வேண்டும் என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், தனித்தேர்வுகளுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,   ‘ஒன்றரை லட்சம் மாணவர்கள்  தனித்தேர்வர்களாக பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் தேர்ச்சி அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கான தேர்வும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தேர்வு நடத்தி நவம்பரில் முடிவுகளை அறிவித்தால் மாணவர்கள் எப்போது உயர் கல்வியில் சேர்வார்கள் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!


  மேலும், தனித்தேர்வர்கள் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீடு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ள அவர், 10,12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்ச்சியை முன் கூட்டியே ஆல்பாஸ் என அறிவித்து அவர்களுக்கு முறையான மதிப்பெண் வழங்கப்பட்டால் கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி!


  லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
  Published by:Murugesh M
  First published: