• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?’ : மக்கள் நீதி மய்யத்திற்கு எதிராக கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்

‘பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா?’ : மக்கள் நீதி மய்யத்திற்கு எதிராக கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கடின உழைப்பால் முன்னேறி வந்துள்ள தன்னைப் பார்த்து மக்கள் நீதி மய்யம் துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறது என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பியுள்ளார் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்.

  • Share this:
    கடின உழைப்பால் முன்னேறி வந்துள்ள தன்னைப் பார்த்து மக்கள் நீதி மய்யம் துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறது என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன்.

    இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், “மத்தியில் அரசாங்கதைதை அமைத்திருக்கும் கட்சி, பல்வேறு மாநிலங்களில் ஆளுகின்ற கட்சி. அந்த கட்சியில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும், அகில இந்திய தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், கட்சி தலைவரும் இந்த ஊர் பொண்ணு, உங்க ஊர் பொண்ணுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    ஆனால், கமல் அவர்கள் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை வானதியோடு நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சொன்னதற்கு என்னை துக்கடா அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் கூறுகின்றது. நான் இங்குதான் ஓர் கிராமத்தில் பிறந்து, அரசாங்க பள்ளியில் படித்து, வழக்கறிஞர் தொழில் செய்து வந்திருக்கிறேன். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

    நான் எவ்வளவோ நேரம் குடும்பத்தை விட்டு, நடந்தே இந்த மக்களுக்கான சேவைகளை செய்துள்ளேள். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதி மக்களுக்கு நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று, என்னுடைய சமூக ஊடக தளங்களைப் பாருங்கள். ஆனால், என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?

    ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, அரசியலில் உயர்ந்து வரும்போது, இப்படித்தான் கேவலப்படுத்துவாங்களா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் வீட்டு பெண்களுக்கும் இந்த துன்பங்கள் இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். இப்படி முன்னேறி பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதான் என்று கூறினால், பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா, பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவார்களா?, மக்கள் நீதி மய்யமும், கமல் அவர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் உங்கள் முன்னர் இந்த கேள்வியை வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் சி.கே.குமரவேல் வெளியிட்டிருந்த அறிக்கையில். “மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கள் தலைவரை, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால்தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்.

    அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார்.

    அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம். ஸ்மிருதி இரானி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும்.

    Must Read : பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை... எல்.முருகனை ஆதரித்து தாராபுரத்தில் பிரச்சாரம்

     

    ஏற்கனவே இருமுறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாக தோற்கத் தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்.” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: