இளைஞர்களுடன் பூப்பந்து விளையாடி வாக்கு சேகரித்த வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது இளைஞர்களுடன் சேர்ந்து வானதி ஸ்ரீனிவாசன் பூப் பந்து விளையாட்டி வாக்கு சேகரித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாக்காளர்களைக் கவர்ந்துவருகின்றனர். சென்னை வேளச்சேரி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் அசோக், ‘வாக்கு சேகரிக்கும்போது பரோட்டா கடையில் பரோட்டா போட்டு ஊழியர்களிடம் வாக்கு சேகரித்தார். நாகப்பட்டினம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தங்க கதிரவன், ‘துணி துவைத்து வாக்கு சேகரித்தார். ஆயிரம்விளக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு, ‘டீ போட்டு வாக்கு சேகரித்தார். விருகம்பாக்கத்தில் தி.மு.க வேட்பாளர் பிரபாகர ராஜா, ‘ஹோட்டலில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார். கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் ஆட்டோவில் சென்றார், காலையில் வாக்கிங் சென்றார், சிலம்பம் சுற்றிக் காண்பித்தார். இப்படி, வித்தியாச வித்தியாசமாக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்துவருகின்றனர்.

    இந்தநிலையில், பா.ஜ.க சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி ஸ்ரீனிவாசனும் பல்வேறு முறைகளில் வாக்கு சேகரித்துவருகிறார். பொதுமக்களுடன் தெருக்களில் இறங்கி வாக்கு சேகரித்தல், தொழில்முனைவோர்கள், ஆடிட்டர்கள் ஆகியோருடன் காஃபி வித் வானதி என்ற பெயரில் அரங்க கூட்டம் உள்ளிட்ட முறைகளில் வாக்கு சேகரித்துவருகிறார். அவருடைய தொகுதியில் பெண்களுக்கு மின்சார அடுப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.


    இந்தநிலையில், இளைஞர்களுடன் இணைந்து பூப்பந்து விளையாடி வாக்கு சேகரித்துள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பூப் பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து பூப் பந்து விளையாடினார் வானதி. இளைஞர்கள் அடிக்கும் பந்தை விடாமல் அடித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: