Vanathi Srinivasan : டாஸ்மாக் திறப்பு அவசியமா?... இதுதான் விடியலா? - முதலமைச்சரை சாடும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் தொற்று ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில், இறப்பு நூற்றுக்கணக்கில் உள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது அவசியமா? என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி விழுப்பி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பித்தபோது, மதுக்கடைகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, மதுக்கடைகளை திறக்க அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்போது, மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று கூறி, எதிர் கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டானின், மற்றும் திமுகவினர் அவரவர் வீடுகளுக்கு வெளியில் நின்று கறுப்புக் கொடி பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

Must Read : ஊரடங்கு நீட்டிப்பு: எவை இயங்கும்? எவை இயங்காது? முழு விவரம்

ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



அந்த வகையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமது முகநூல் பதிவில், “ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில், இறப்பு நூற்றுக்கணக்கில், டாஸ்மாக் திறப்பு அவசியமா?, ஒரு வருடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட வேஷம் மாறியதோ? ஒலித்த கோஷம் மறந்ததோ?, இதுதான் விடியலா??” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published: