ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யோகி ஆதித்யநாத் வந்தபோது கல்வீசியவர்கள் எங்கள் கட்சி கிடையாது - வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம்

யோகி ஆதித்யநாத் வந்தபோது கல்வீசியவர்கள் எங்கள் கட்சி கிடையாது - வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நிறைய வாய்ப்பு இருப்பது குறித்து விரைவில் மத்திய அமைச்சர்களுடன் பேச இருப்பதாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து பேசினார். ஆட்சியரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மரியாதை நிமித்தமாக ஆட்சியரை சந்தித்தேன் எனவும், கொரோனா இரண்டாவது அலையால் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிலை குறித்து ஆட்சியருடன் ஆலோசித்தாகவும் தெரிவித்தார். மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து தேவைகள் குறித்து கேட்டறிந்தாகவும், மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நிறைய வாய்ப்பு இருப்பது ஆட்சியர் விளக்கி இருப்பதாகவும், கொரோனா பாதிப்புகளின் சரி செய்ய ஆக்ஸிஜன் தேவை குறித்து மத்திய அமைச்சரிடம் விரைவில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

  ஆட்சியர் அலுவலகத்திலேயே ஹெல்ப்லைன் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  சென்னையில் அம்மா உணவகம் தாக்கப்பட்ட சம்பவம் போன்று பல சம்பவங்கள் திமுகவில் நடந்துள்ளது எனவும் பல முறை நாங்களும் குறிப்பிட்டுள்ளோம் என கூறிய அவர், புதியதாக பொறுப்பேற்கும் தி.மு.க தலைவர்கள் தங்கள் கட்சியினருக்கு தகுந்த அறிவுரை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார். அரசியல் ரீதியாக இது போன்றவற்றை முன்னெடுக்கும் குணம் திமுகவினருக்கு உண்டு எனவும் இதை ஆரம்பத்திலேயே திமுக தலைமை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் கோவை வந்த போது ஏற்பட்ட கல்வீச்சு குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து போலீசாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறிய அவர், அந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தெரியாமல் நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், வீசியவர் எங்க கட்சிகாரரே இல்லை எனவும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: BJP, Vanathi srinivasan